பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் 

முகாம்;

Update: 2025-07-04 15:07 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில், தொல்குடி திட்டம், பழங்குடியினருக்கான சிறப்பு முகாம், பேராவூரணி வட்டாட்சியர் என்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பழங்குடியினருக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசி, கோரிக்கை மனுக்களைப் பெற்றார். நிகழ்ச்சியில், வட்ட வழங்கல் அலுவலர் ராமச்சந்திரன், ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் கண்ணன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். தொல்குடி பழங்குடியினருக்கான சிறப்பு முகாமில், வீட்டு மனைப் பட்டா, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, முதியோர் உதவித்தொகை, மின் இணைப்பு, கடன் உதவி உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

Similar News