தஞ்சாவூர் மாவட்டத்தில், நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார் 

திறப்பு விழா;

Update: 2025-07-04 15:20 GMT
தஞ்சாவூர் மாவட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலிக் காட்சி வாயிலாக, மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், தஞ்சாவூர் ஸ்ரீஹரி நகரில் புதிய நகர்ப்புற நலவாழ்வு மையத்தை  திறந்து வைத்ததைத் தொடர்ந்து, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர்.கோவி.செழியன், மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் மரு.அஞ்சுகம் ஆகியோர் வியாழக்கிழமை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்ரீஹரி நகரில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய மாநகர நலவாழ்வு மையமும், டவுன் கரம்பையில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய மாநகர நலவாழ்வு மையமும், கும்பகோணம் மாநகராட்சியில் பாத்திமாபுரத்தில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய மாநகர நலவாழ்வு மையமும், தாராசுரத்தில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய மாநகர நலவாழ்வு மையமும், கோட்டையூரில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய மாநகர நலவாழ்வு மையமும் மற்றும் கும்பகோணம் திப்பிராஜபுரத்தில் ரூபாய் 1.20 கோடி மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் என மொத்தம் தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூபாய் 2.45 கோடி மதிப்பீட்டில் புதிய சுகாதார நிலைய கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு  திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் க.கண்ணன், இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.கலைவாணி, மாநகர நல அலுவலர் மரு.நமச்சிவாயம் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Similar News