நீலகிரி மாவட்டம் குன்னூரில் முழுமையாக பணிகள் நிறைவடையாத கட்டிடத்தில் நேற்றைய தினம் ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டதால் பாஜகவினர் முற்றுகையிட்டனர்.......

சிறிது நேரம் பரபரப்பு;

Update: 2025-07-04 15:36 GMT
நீலகிரி மாவட்டம் குன்னூரில் முழுமையாக பணிகள் நிறைவடையாத கட்டிடத்தில் நேற்றைய தினம் ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டதால் பாஜகவினர் முற்றுகையிட்டனர்....... தமிழகத்தில் மொத்தமாக நேற்றைய தினம் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உழவர் சந்தை பகுதியில் மக்கள் நல வாழ்வு மையம் மற்றும் உமரி காட்டேஜ் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையமும் திறக்கப்பட்டது. உமரி காட்டேஜ் பகுதியில் திறக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் பணிகள் நிறைவடையாமல் மின்வசதி மற்றும் குடிநீர் கழிப்பறை போன்ற வசதிகள் இல்லாமல் பாதி வேலை முடிந்த கட்டிடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்பட்டு இன்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனை அறிந்த பாஜாகாவினர் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர் தகவல் அறிந்த குன்னூர் டிஎஸ்பி ரவி தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர் பின்பு நகராட்சி பொறியாளர் அறிவழகன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் இறுதியாக பணிகள் நிறைவடைந்த பின் ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பதாக உறுதியாக அளித்தபின் பாஜகவினர் கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News