ட்ரோன் கேமரா மூலம் காட்டிய அலைகள் கணிப்பு

அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி;

Update: 2025-07-04 15:41 GMT
கூடலூர் வனக்கோட்டம், கூடலூர் வனச்சரகத்திற்குட்பட்ட பாடந்துரை மற்றும் கொட்டாய் மட்டம் பகுதிகளில் மக்கள் குடியிருப்புக்களை சுற்றித்திரிந்த காட்டு யானைகளை, முதுமலை வனப்பகுதிகளுக்குள் விரட்டுவதற்காக மாவட்ட வன அலுவலரின் அறிவுரையின் படி, கர்நாடகா மாநிலம், பெங்களூரிலிருந்து பயிற்சி பெற்ற சிறப்பு ட்ரோன் இயக்கும் குழுவினரை வரவழைக்கப்பட்டது. அக்குழுவின் உதவியுடன் கூடலூர் வனக்கோட்ட சிறப்பு யானை பாதுகாப்பு பணி குழுவினர்களும் மற்றும் களப்பணியாளர்களும் இணைந்து பாடந்துரை மற்றும் கொட்டாய் மட்டம் பகுதிகளிலிருந்து முதுமலை வனப்பகுதிக்கு பாதுகாப்பாக யானைகள் விரட்டப்பட்டு மனித வனவிலங்கு மோதல்கள் ஏற்படாமல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .இதுபோன்ற செயல்களில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபடுவதால் பகுதி மக்களிடையே ஒரு தெளிவு காணப்பட்டதாக கூறப்படுகின்றது

Similar News