நீலகிரி மாவட்டம் கூடலூர் கேரளா செல்லும் சாலையில் முத்தங்கா சரணாலயம் பகுதியில் கேரளா அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானை.......
பாதுகாப்புடன் பயணிக்க அறிவுரை;
நீலகிரி மாவட்டம் கூடலூர் கேரளா செல்லும் சாலையில் முத்தங்கா சரணாலயம் பகுதியில் கேரளா அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானை....... நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி முதுமலை புலிகள் காப்பகம் பந்திப்பூர் சரணாலயம் கேரளா முத்தங்கா சரணாலயம் உள்ளடக்கிய பகுதியாகும் வனவிலங்குகள் குறிப்பாக காட்டு யானைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வருவது சர்வ சாதாரணமாகிவிட்டது இந்நிலையில் இன்று காலை திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த கேரளா அரசு பேருந்தை ஒற்றை காட்டு யானை வழி மறித்தது அரசு பேருந்து ஓட்டுனர் ஹாரன் மூலம் தொடர்ந்து ஒலி எழுப்பியதால் காட்டு யானை பின்வாங்கியது இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.