நீலகிரி மாவட்டம் குன்னூர் மலை ரயில் பாதையில் இருசக்கர வாகனத்தில் சென்று மாஸ் காட்டிய இளைஞர்

இளைஞர் ரயில்வே போலீசார் விசாரணை.......;

Update: 2025-07-04 15:45 GMT
நீலகிரி மாவட்டம் குன்னூர் மலை ரயில் பாதையில் இருசக்கர வாகனத்தில் சென்று மாஸ் காட்டிய இளைஞர் ரயில்வே போலீசார் விசாரணை....... நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் இளைஞர்கள் அவ்வப்போது நகர மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் பைக் ரேஸ் செய்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள 13 வது கொண்டை ஊசி அருகே உள்ள மலை ரயில் பாதையில் இருசக்கர வாகனத்தில் சென்று அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். குன்னூரை சேர்ந்த ஒரு வாலிபர் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதற்காக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர் கதையாகவே உள்ளது.குன்னூர்- மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் முதன் முறையாக இருசக்கர வாகனம் இயக்கப்பட்ட சம்பவம் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளங்களில் தங்களது திறமைகளை வெளிக்காட்ட பல்வேறு விபரீத முயற்சிகளை மேற்கொண்டு வரும் இளைஞர்கள் ஆபத்தை உணராமல் ரயில் பாதையில் இந்த வாலிபர் மாஸ் காட்டியுள்ள சம்பவம் குன்னூரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தொடர்பாக ரயில்வே போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் இதே ரயில் பாதையில் அவ்வப்போது காட்டு யானைகள் முகாமிட்டிருப்பதும் அந்த வாலிபர் வாகனத்தை இயக்கிய அதே பகுதில் காட்டு யானைகள் அடிக்கடி வருவதும் குறிப்பிடதக்கது ஆபத்தை உணராமல் இதுபோல் செயல்படும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

Similar News