கீழப்பழுவூர் அருகே பள்ளி மாணவ மாணவிகளுக்கு சமூக நீதி, பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்து காவல்துறையின் சார்பில் விழிப்புணர்வு
கீழப்பழுவூர் அருகே பள்ளி மாணவ மாணவிகளுக்கு சமூக நீதி, பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்து காவல்துறையின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது;
அரியலூர் ஜூலை.4- அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் உத்தரவுப்படி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அறிவுரையின்படியும், காவல் துறையினர் கீழப்பழூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விநாயகா கல்வி நிறுவனத்தில் சமூக நீதி, வன்கொடுமை மற்றும் தீருதவி பற்றியும் பட்டியல் பழங்குடி இன மக்களுக்கு அரசு வழங்கும் கடன் உதவி சலுகைகள் பற்றியும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் தீண்டாமை நடைபெறாமல் தடுப்பதற்காகவும் அரசின் துறைகள் என்னென்ன செயல்படுகிறது என்பதைப் பற்றி விளக்கியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் இணைய வழி குற்றங்கள் பற்றியும் மதுவினால் ஏற்படும் தீமைகள் பற்றியும், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு புள்ளியியல் ஆய்வாளர் பாப்பாத்தி காவலர் .கார்த்திகேயன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.. இதனைத் தொடர்ந்து குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் தமிழரசன் மற்றும் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மகாலெட்சுமி பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான குற்றங்கள் மற்றும் பாதுகாப்புகள், குழந்தை திருமணம், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதைத்தொடர்ந்து இணைய குற்றப்பிரிவு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் இணைய குற்றங்கள், டிஜிட்டல் அரஸ்ட், இணைய பண மோசடிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சி நிகழ்ச்சியில் காவல்துறையினர் பள்ளி அலுவலர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.