மேட்டுப்பாளையத்தில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடக்கம் !
மேட்டுப்பாளையம் நகராட்சியில் பணியாற்றும் 250 தூய்மை பணியாளர்களுக்கு, நகராட்சி சார்பில் காலை உணவு வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.;
மேட்டுப்பாளையம் நகராட்சியில் பணியாற்றும் 250 தூய்மை பணியாளர்களுக்கு, நகராட்சி சார்பில் காலை உணவு வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை நீலகிரி மக்களவை உறுப்பினர் ராஜா துவக்கி வைத்து, பணியாளர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். பின்னர் அவர் பேசுகையில், மேட்டுப்பாளையம் நகராட்சிக்காக கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ.100 கோடி மதிப்பில் குடிநீர் திட்டம், பஸ் நிலைய மேம்பாடு உள்ளிட்ட பல திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், லாக் அப் மரணங்கள் தொடர்பான அதிமுக ஆட்சிக் கால நடவடிக்கைகள் மற்றும் திமுக அரசு தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகளை ஒப்பிடும் போது, நல்லாட்சி எது என்பது தெளிவாக புரியும் என்றார்.