ஜெயங்கொண்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை மற்றும் உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பில், செய்ய வேண்டிய பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை துறை
ஜெயங்கொண்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை மற்றும் உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பில், செய்ய வேண்டிய பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை துறை அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.;
அரியலூர், ஜூலை.5- அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கிழக்கு, மேற்கு, மத்திய ஒன்றியம் மற்றும் ஜெயங்கொண்டம் நகரம், உடையார்பாளையம் பேரூர் ஆகியவற்றிற்கு உட்பட்ட BLA 2 மற்றும் BDA உறுப்பினர்களை சந்தித்து, தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை மற்றும் உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பில், செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், உறுப்பினர் சேர்க்கை குறித்து மாவட்ட செயலாளர், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனைகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன், ஜெயங்கொண்டம் ஒன்றிய பொறுப்பாளர் தன.சேகர், ஜெயங்கொண்டம் நகர செயலாளர் வெ.கொ.கருணாநிதி, உடையார்பாளையம் பேரூர் செயலாளர் பா.கோபாலகிரு .ஷ்ணன், ஜெயங்கொண்டம் மத்திய ஒன்றிய பொறுப்பாளர் இரா.மணிமாறன், ஜெயங்கொண்டம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் நா.கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.