வாரியங்காவலில் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற நெசவு தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலி குடிபோதையால் நேர்ந்த சோகம்
வாரியங்காவலில் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற நெசவு தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
அரியலூர், ஜூலை.5- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் (58) குடிப்பழக்கம் உடைய இவர் நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இரவு மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்துவிட்டு மது போதையில் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கு அதிக வாந்தி, பேதி காரணமாக குடும்பத்தினர் அவரை ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சையிலிருந்த மணிவண்ணன் சிகிச்சை பலனின்றி வாயில் நுரை தள்ளியவாறு பரிதாபமாக உயிரிழந்தார். தற்கொலைக்கான காரணம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இறந்து போன மணிவண்ணனுக்கு செந்தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், மூன்று மகள்களும் இரண்டு மகன்களும் என 5 பிள்ளைகள் உள்ளனர். இதில் மூன்று மகள்களுக்கும் திருமணமான நிலையில் இரண்டு மகன்களில் ஒரு மகன் மாற்றுத்திறனாளி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.