கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம்

மழை நீர் ஆதாரத்தை பாதுகாத்திட அரியலூர் மாவட்டம் கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை எடுத்துள்ளனர்..;

Update: 2025-07-05 15:12 GMT
அரியலூர், ஜூலை 5- மழைநீர் ஆதாரத்தை பாதுகாத்திட அரியலூர் மாவட்டம், கொள்ளிடத்தின் குறுக்கே மதகுடன் கூடிய தடுப்பணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மாநாட்டில் தீர்மானம் இயற்றப்பட்டது. அரியலூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாநாட்டில் இயற்ற தீர்மானங்ள்: அரியலூரில் புதிய தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும். அரியலூர்}கும்பகோணம்}தஞ்சை}சேலம் இணைப்பு புதிய ரயில் பாதைத் திட்டத்தை செயல்படுத்திட வேண்டும். அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் உயரதர மருத்துவ சிகிச்சை வசதிகளை ஏற்படுத்திட வேண்டும். 100 நாள் வேலையை அதிகரித்து , நாள் கூலியை உயர்த்திட வேண்டும். இந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை நகர்ப்புறப் பகுதிகளுக்கும் விரிவாக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநாட்டுக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் சொ.ராமநாதன் தலைமை வகித்தார். அரியலூர் ஒன்றியச் செயலர் து.பாண்டியன் முன்னிலை வகித்தார். மாநில துணைச் செயர் நா.பெரியசாமி மாநில செயற்குழு உறுப்பினர் வை.சிவபுண்ணியம், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் மு.அ.பாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.மாவட்ட மாவட்டச் செயலர் இரா.உலகநாதன், மாவட்ட துணைச் செயலர் கலியபெருமாள், மாவட்டக் குழு உறுப்பினர்  ஜி.ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக முன்னாள் மாவட்ட துணைச் செயலர் டி.தண்டபாணி  வரவேற்றார். மாநாட்டில் மாவட்டச் செயலாளராக உடையார்பாளையம் கே.நடராஜன், துணைச் செயலாளராக டி.தண்டபாணி, பொருளாளராக ஜி.ஆறுமுகம் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.மாநாட்டை முன்னிட்டு, வியாழக்கிழமை மாலை பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

Similar News