ஆதி வாராஹி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை!
ஆதி வாராஹி அம்மன் ஆலயத்தில் இன்று மூலவர் வாராஹி அம்மனுக்கு அபிஷேக பூஜை, தீப ஆராதனை நடைபெற்றது;
வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா பகுதியில் அமைந்துள்ள அன்னை ஆதி வாராஹி அம்மன் ஆலயத்தில் இன்று மூலவர் வாராஹி அம்மனுக்கு அபிஷேக பூஜை, தீப ஆராதனை நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.