கலைக் கல்லூரியில் சிறப்பு மருத்துவ முகாம்
விளாத்திகுளம் கலைக் கல்லூரியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது;
விளாத்திகுளம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி பயன்பாட்டு துறை சார்பாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், கல்லூரி முதல்வர் (பொறுப்பு) குமாரி ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில், விளாத்திகுளம் சுப்பிரமணியசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறையின் முன்னாள் மாணவ - மாணவியர்கள் சார்பாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் இன்பராஜா தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் குமாரி முன்னிலை வகித்தார். இதில், இரத்த பரிசோதனை, இரத்த அழுத்தம் பரிசோதனை, மருத்துவர்கள் ஆலோசனை, மருந்துகள் வழங்கப்பட்டது. 100% வருகை பதிவேட்டுடன் சிறப்பாக செயல்பட்ட மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கல்லூரி பேராசிரியர்கள், மாணவ - மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெற்றனர். முகாமில் பேரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் நல்ல செல்வம். RBSK MALE TEAM மருத்துவ அலுவலர் முத்துராஜா, RBS K FEMALE TEAM மருத்துவ அலுவலர் எழிலரசி, நடமாடும் மருத்துவக் குழு, பேரிலோவன்பட்டி வட்டார அனைத்து இடைநிலை சுகாதார பணியாளர்கள் ( MLHP), அனைத்து சுகாதார தன்னார்வலர்கள் (WHV) மற்றும் கல்லூரி பேராசியர்கள், மாணவ - மாணவிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை கணினி பயன்பாட்டியல் துறை உதவி பேராசிரியர்கள் பிரபாவதி, சங்கீதா மற்றும் ஜெயந்தி உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.