மத்தூர் அருகே வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு.

மத்தூர் அருகே வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு.;

Update: 2025-07-07 01:42 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள நாகம்பட்டியை சேர்ந்தவர் முருகன் (53) கட்டிட தொழிலாளியான. இவர் நேற்று முன்தினம் இரவு நாகம்பட்டியில் சாலையில் நடந்து சென்ற போது அந்த வழியாக சென்ற வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே முருகன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அற்து வந்த மத்தூர் போலீசார் முருகனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News