சூளகிரி கிணற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு.
சூளகிரி கிணற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள காமன்தொட்டி பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் அபிஷேக்குமார் (21) இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று தனது தம்பி மற்றும் நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது. அபிஷேக்குமார் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினார். அபிஷேக் உயிரிழந்தார் தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார், தீயணைப்பு துறையினர். கிணற்றில் இருந்து அவரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.