காமராஜ் கல்லூரியில் பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் மருத்துவ முகாம்
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.;
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற மருத்துவ முகாமை கல்லூரி செயலாளர் சோமசுந்தரம், விநாயகமூர்த்தி, கல்லூரி முதல்வர் பானுமதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் அரவிந்த் கண் மருத்துவமனை, திரவியம் ஆர்த்தோ ஹாஸ்பிடல், மற்றும் ஜேஜே பல் மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். முகாம் ஏற்பாடுகளை கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினர் செய்தனர். காமராஜ் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி வன்னியராஜ் கலந்து கொண்டனர்.