கோவை: ரத்தினபுரியில் புறா பந்தயம்: சிறகுகள் விரித்து பறந்த புறாக்கள் !

கோவை ரத்தினபுரி பகுதியில் நடைபெற்ற புறா பந்தயத்தில் ஏராளமான புறா ஆர்வலர்கள் பங்கேற்று தங்களது புறாக்களை போட்டிக்கு கொண்டுவந்தனர்.;

Update: 2025-07-07 07:04 GMT
கோவை ரத்தினபுரி பகுதியில் நேற்று நடைபெற்ற புறா பந்தயத்தில் ஏராளமான புறா ஆர்வலர்கள் பங்கேற்று தங்களது புறாக்களை போட்டிக்கு கொண்டுவந்தனர். பந்தயத்தில் புறாக்களுக்கு டேக் போட்டு நம்பர் வழங்கி, 100, 200, 1,000 கி.மீ தூர பந்தயங்கள், வட்டமடிக்கும் புறாக்கள் (கரண பந்தயம்), டிப்ளர் ரேஸ் எனப் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. 20 மணி நேரம் தொடர்ந்து பறக்கும் திறனுடைய புறாக்கள் வெற்றியாளர்களாக தேர்வாகின்றன. சிறந்த புறாக்களுக்கு பரிசுகள், கோப்பைகள் வழங்கப்பட்டன. பைரி, மாரி போன்ற திரைப்படங்களால் மக்கள் மத்தியில் பிரபலமான புறா பந்தயங்களுக்கு அரசு அங்கீகாரம் அளித்து, போட்டிகளை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என ஆர்வலர்கள் வலியுறுத்தினர். புறாக்களை நண்பர்களைப் போலவே வளர்ப்பதாகவும், இது மரபு சார்ந்த ஆடம்பரக்கழிவு அல்லாத போட்டியாகவும் கூறுகிறார்கள்.

Similar News