கோவை: அடிப்படை வசதிகள் இல்லாத அரசு குடியிருப்பில் மக்கள் போராட்டம் !
அரசு அடுக்குமாடி குடியிருப்பில் அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி பொதுமக்கள் போராட்டம்.;
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள 1,840 வீடுகளைக் கொண்ட அரசு அடுக்குமாடி குடியிருப்பில் 6,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் கடும் அவலத்தில் உள்ளனர். சாலை நசுங்கிய நிலையில் இருக்கிறது. தினமும் காலை வெறும் 2 மணி நேரம் மட்டுமே தண்ணீர் வருகிறது. லிப்ட் செயலிழந்துள்ளதால் 14 மாடி குடியிருப்பில் முதியோர்களும் நோயாளிகளும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். சுற்றுச்சுவர் இல்லாததால் சமூக விரோதிகள் செல்லும் பாசறையாகவும், சாக்கடை பராமரிப்பு இல்லை என்பதால் கழிவுநீர் தேங்கி இருப்பதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். புகார்கள் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், மக்கள் நேற்று இரவு முதல் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.