கோவை விவசாயிகள் நூதன பேரணி – அரசு அலுவலக முற்றுகைக்கு எச்சரிக்கை
கோவை சூலூரில், உழவர் தினத்தையொட்டி விவசாயிகள் மற்றும் ஏர்முனை இளைஞர் அணியினர் சேர்ந்து தென்னை மரங்களை ரேக்ளா, மாட்டு, சாரட்டு வண்டிகளில் ஏற்றி நூதனமாக பேரணி நடத்தினர்.;
கோவை சூலூரில், உழவர் தினத்தையொட்டி விவசாயிகள் மற்றும் ஏர்முனை இளைஞர் அணியினர் சேர்ந்து தென்னை மரங்களை ரேக்ளா, மாட்டு, சாரட்டு வண்டிகளில் ஏற்றி நூதனமாக பேரணி நடத்தினர். 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் 20 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. விவசாயக் கடன்களுக்கு சிபில் ஸ்கோர் ரத்து, கால்நடைகளை தேடி மருத்துவம் திட்டம், நொய்யல் ஆற்றில் கழிவுநீர் தடுப்பு, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அடுத்த ஆண்டு அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.