சூலூரில் காவல் ஓட்டுனர் மீது அரிவாள் தாக்குதல் – நகை கொள்ளை, தீவிர விசாரணை

கோவை மாவட்டம் சூலூர் அருகே ஆர்.ஜி. புதூரைச் சேர்ந்த மாவட்ட கியூ பிரான்ச் பிரிவு காவல் ஓட்டுநர் பார்த்திபன் மீது மர்ம நபர்கள் அரிவாளால் தாக்கி, அவரது மனைவி ரேவதியிடமிருந்து ஐந்து பவுன் நகைகளை பறித்துசென்றனர்.;

Update: 2025-07-07 09:06 GMT
கோவை மாவட்டம் சூலூர் அருகே ஆர்.ஜி. புதூரைச் சேர்ந்த மாவட்ட கியூ பிரான்ச் பிரிவு காவல் ஓட்டுநர் பார்த்திபன் மீது மர்ம நபர்கள் அரிவாளால் தாக்கி, அவரது மனைவி ரேவதியிடமிருந்து ஐந்து பவுன் நகைகளை பறித்துசென்றனர். சம்பவம் அன்று இரவு 12 மணியளவில், ஹோட்டலில் இருந்து வீடு திரும்பும் வழியில் காட்டுப்பாதையில் மூன்று மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். படுகாயமடைந்த பார்த்திபன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். சம்பவ இடத்தில் அரிவாள் மற்றும் மது பாட்டில்கள் மீட்கப்பட்டன. சூலூர் போலீசார், தடயவியல் நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கருமத்தம்பட்டி டிஎஸ்பி தங்கராமன் தலைமையில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News