ஊத்துக்காடு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவில் தீமிதி திருவிழா
ஊத்துக்காடு ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத தர்மராஜா சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்;
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் ஊத்துக்காடு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத தர்மராஜா சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் உலக மக்கள் நன்மை வேண்டி ஆண்டுதோறும் அக்னி வசந்த மகர்ஷவ விழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத தர்மராஜா சுவாமி திருக்கோவில் மகா அக்னி வசந்த மகோச்சுவர் விழா முன்னிட்டு கடந்த 16.06.2025 அன்று அபிஷேக ஆராதனை மற்றும் கொடியேற்றுதல் நிகழ்வு நடைபெற்றது. அதணை தொடர்ந்து தினசரி மகாபாரத சொற்பொழிவுகளும் நடைபெற்ற நிலையில் இன்று காலை துரியன் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்ற நிலையில் இரவு தீமிதி திருவிழா தொடங்கியது. வானவேடிக்கைகள் முழங்க ஸ்ரீ திரௌபதி அம்மன். வீதி உலாவை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் இன்னிசை கச்சேரியும் வெகு விமர்சையாக யாக நடைபெற்றது. இவ்விழா ஏற்பாடுகளை தேவி ஸ்ரீ எல்லையம்மன் கோவில் அறங்காவலர் ஜி.கே. பாஸ்கர் சாந்தி, அறங்காவலர் குழு செயலாளர் ஏ.சிவகுமார் துணைத்தலைவர், சேட்டு, ஆலய தொண்டு குழு உறுப்பினர்கள் யூஜிஎஸ்.சுரேஷ், கே.புவனேந்திரன், பி.கிரிவரதன், கடம்பாடி மற்றும் விசிக தெற்கு ஒன்றிய செயலாளர் ஜார்ஜ் வலவன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்