பயனாளிகளுக்கு காய்கறி விதை தொகுப்பு வழங்கல்

சாலவாக்கத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டத்தின் கீழ், 73 பயனாளிகளுக்கு காய்கறி, பழ, விதைத்தொகுப்பு வழங்கப்பட்டது;

Update: 2025-07-07 12:28 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டத்தின் கீழ், 73 பயனாளிகளுக்கு காய்கறி, பழ, விதைத்தொகுப்பு வழங்கப்பட்டது. சாலவாக்கம் கிராமத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்ட துவக்க விழா நேற்று நடந்தது. சாலவாக்கம் ஊராட்சி தலைவர் சத்யா தலைமை வகித்தார். உத்திரமேரூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, பயனாளிகளுக்கு காய்கறி, பழச்செடி விதைத்தொகுப்புகளை வழங்கினார்.

Similar News