குமரி மாவட்டம் புலியூர்குறிச்சி பகுதி சேர்ந்தவர் ஷைனி பிரியா (30). கோவையில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் இரணியல் பகுதியை சேர்ந்த இன்ஜினியர் ஒருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் இன்று 7-ம் தேதி தக்கலையில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஷைனிப்பிரியா மாயமானார். இது குறித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் இளம்பெண் மாயமானது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இன்று காலை ஷைனி பிரியாவின் செல்போனிலிருந்து வாலிபர் ஒருவருவருடன் சைனி பிரியா மணக்கோலத்தில் இருந்த படம் வெளியானது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.