நாகர்கோவில் வடசேரி கனகமூலம் காய்கறி சந்தையில் உள்ள கடைகளில் நேற்று காலை மாநகர நகர் நல அலுவலர் டாக்டர் ஆல்பர் மத்தியரசு தலைமையில் சுகாதார அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் வெற்றிலை பாக்கு வியாபாரம் செய்யும் கடையில் சோதனை நடந்தது. சோதனையில் கடையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு இருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் 7.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட புகையிலை பொருட்கள் உணவு பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.