மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் – எடப்பாடி பழனிசாமி உறுதி!
2026 சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்பது உறுதி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;
2026 சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்பது உறுதி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவையில் இன்று நடைபயிற்சியில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களுடன் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவுக்கு கோவை ஒரு முக்கியமான மாவட்டம். அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மக்களுக்கு நன்மை ஏற்படுத்தின. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை மிக அதிகமாக உள்ளது என்றார். தற்போதைய திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யப்படவில்லை என்றும், மக்கள் சிரமத்தில் வாழும் நிலைமை ஏற்பட்டு விட்டது என்றும் அவர் குற்றம்சாட்டினார். சரியான திட்டமிட்ட ஆட்சி மூலம் மக்களை காப்பாற்றும் பணியை மேற்கொண்டு, தமிழகத்தை மீட்டெடுப்போம் என்றார் எடப்பாடி பழனிசாமி.