சோமனூர் ரயில்வே மேம்பாலத்தில் விபத்து அபாயம் – வீடியோ வைரல்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே கருமத்தம்பட்டி சோமனூர் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் அமைக்கப்பட்ட மைய சாலை தடுப்புகள் சிதறி கிடப்பதால் விபத்து அபாயம் உருவாகியுள்ளது.;

Update: 2025-07-08 05:06 GMT
கோவை மாவட்டம் சூலூர் அருகே கருமத்தம்பட்டி சோமனூர் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் அமைக்கப்பட்ட மைய சாலை தடுப்புகள் சிதறி கிடப்பதால் விபத்து அபாயம் உருவாகியுள்ளது. சாலை குறுகலாகவும் வளைவாகவும் உள்ளதால் ஏற்கனவே பல விபத்துகள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பல மாதங்களாக பாலத்தில் உள்ள விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், கனரக வாகனம் ஒன்று பழுதடைந்து நின்றதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. சிதறிய தடுப்புகளில் வாகனங்கள் மோதினால் பாலத்தில் இருந்து கீழே விழும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் இந்நிலையை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது அது வைரலாகி வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பிற்காக சாலை தடுப்புகள் மற்றும் விளக்குகளை உடனடியாக சரிசெய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News