வாடிப்பட்டி அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலி
மதுரை வாடிப்பட்டி அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலத்த காயமுற்று சிகிச்சை பெற இன்றி உயிரிழந்தார்.;
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ரெட்டியபட்டி கோவில் தெருவை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் செந்தில் முருகன் நேற்று முன்தினம் (ஜூலை .6) மாலை 6 மணிக்கு மதுரை திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் எஸ் எஸ் மஹால் அருகே சாலையை கடக்க முற்பட்டபோது திண்டுகலைச் சேர்ந்த நடராஜ் மகன் முருகானந்தம் என்பவர் ஓட்டி வந்த கார் செந்தில் முருகன் மீது மோதியதில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி இலக்கியா வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.