அரக்கோணத்தில் மின்சார ரயில் தொழில்நுட்ப கோளாறு
அரக்கோணத்தில் மின்சார ரயில் தொழில்நுட்ப கோளாறு;
சென்னையிலிருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரயிலின் பேன்டோகிராப் கருவி திடீரென உடைந்தது. இது அரக்கோணம் அருகே நடைமேடை பிரியும் பகுதியில் நடந்தது. இதனால் உயர்மின்கம்பிகள் சேதமடைந்து திருப்பதி- சென்னை வெஸ்ட்கோஸ்ட் ரயில்கள் உள்ளிட்ட பல ரயில்கள் தாமதமாகின. சுமார் 1.5 மணி நேரத்திற்குப் பிறகு பழுதுகள் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து பழைய நிலைக்கு திரும்பியது.