ஓச்சேரி அருகே மணல் கடத்தியவர் கைது

ஓச்சேரி அருகே மணல் கடத்தியவர் கைது;

Update: 2025-07-10 05:54 GMT
அவளூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஓச்சேரி, மாமண்டூர், களத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சாமிவேல், போலீஸ்காரர் வேணுகோபால் ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டருந்தனர். நேற்று அதிகாலை களத்தூர் கிராமத்தில் மாமண்டூர் நோக்கி, பதிவு எண் இல்லாமல் டிராக்டர் ஒன்று வந்தது. அந்த டிராக்டரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் மணல் கடத்தி வந்தது அதேப்பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 39) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

Similar News