அரக்கோணம் பள்ளி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

பள்ளி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை;

Update: 2025-07-10 05:59 GMT
அரக்கோணம் அடுத்த பரமேஸ்வரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவரது மகன் விஸ்வகணேஷ் (வயது 13). அரக் கோணத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். அந்த பள்ளிக்கு சொந்தமான விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தான். விஸ்வக ணேஷ் உடல்நிலை பாதிக்கப்பட்டு அதனால் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனைக்கு சென்று வந்ததாக கூறப்ப டுகிறது. பின்னர் விடுதிக்கு வந்த நிலையில் நேற்று மாலை விடுதி அறையில் தூக்கில் பிணமாக தொங்கினான். அவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரக்கோணம் போலீசார் மாணவன் விஸ்வகணேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத் துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக் குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரக்கோணம் சு.ரவி எம்.எல்.ஏ., மாணவர் இறந்ததுகுறித்து விடுதி காப்பாளரிடம் விசாரித்தார். விடுதியில் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News