சட்ட விரோதமாக மணல் அள்ளியவர்களை தேடுகிறது போலீஸ்

மதுரை மேலூர் அருகே சட்ட விரோதமாக ஓடையில் மணல் அள்ளியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்;

Update: 2025-07-11 04:44 GMT
மதுரை மாவட்டம் மேலூர் கீழையூர் அருகே மீனாட்சிபுரம் ஓடையில் சட்டவிரோதமாக ஆற்று மணலை அள்ளிக் கொண்டிருப்பதாக கீழவளவு போலீசாருக்கு ரகசிய தகவல் நேற்று (ஜூலை .10) கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சார்பு ஆய்வாளர் ஆனந்த ஜோதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து மணல் அள்ள பயன்படுத்திய டிராக்டர், ஜேசிபி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News