அரசு பள்ளி மாணவர்களின் வருகைகள் குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு பள்ளிகளின் செயல்பாடுகள் தொடர்பாக உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், அரசுப் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு, பழுது பார்த்தல் தேவையுள்ள பள்ளிகளின் விவரங்கள் கேட்டறிந்து பொதுப்பணித்துறையின் மூலம் சீரமைக்க அறிவுறுத்தப்பட்டது.