உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார்.நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள், பெண்ணிற்கு திருமண வயது 21, மக்கள் தொகை கட்டுபடுத்துவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.