சங்கராபுரம் தாலுகா, பொய்க்குணத்தை சேர்ந்தவர் முனியப்பிள்ளை மனைவி மல்லிகா, 65; இவர், கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி தனது மகள் பத்மா, மருமகன் செல்வம் ஆகியோருடன், தடம் எண் 9 ஜி என்ற அரசு பஸ்சில் கச்சிராயப்பாளையத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு சென்றார்.பையில் வைத்திருந்த மணி பர்சில், ரூ.1.57 லட்சம் மதிப்பிலான 5 சவரன் தங்க நகை மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் இருந்தது. கள்ளக்குறிச்சி பஸ்நிலையத்தில் இறங்கி பார்த்த போது, மணி பர்ஸ் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பஸ்ஸில் தேடியும் மணி பர்ஸ் கிடைக்கவில்லை. இது குறித்து மல்லிகா அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.