கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் மாதாந்திர குற்ற வழக்குகள் தொடர்பான கலந் தாய்வுக் கூட்டம் நடந்தது. எஸ்.பி., ரஜத்சதுர்வேதி தலைமை தாங்கினார். குற்ற வழக்குகளை குறைப்பது, கோப்புக்கு எடுக்காத வழக்குகள், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள், போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலைகள் குறித்து கேட்டறியப்பட்டது. நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு விரைவாக கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என எஸ்.பி., அறிவுறுத்தினார். பின்னர் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் வாகனங்களை ஆய்வு செய்து, சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும், விபத்து ஏற்டாத வகையில் வாகனம் ஓட்ட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.