தமிழ் போதிக்கும் ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி முகாம்!

தமிழ் போதிக்கும் ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி முகாம் நடைபெற்றது.;

Update: 2025-07-13 01:42 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில், தனியார் பள்ளிகளில் தமிழ் போதிக்கும் ஆசிரியர்களுக்கான ஒருநாள் பணியிடைப் பயிற்சி முகாம் பி.எம்.சி. பதின்ம மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பயிற்சி முகாமினை மாவட்டக் கல்வி அதிகாரி (தனியார் பள்ளிகள்) சிதம்பரநாதன் துவங்கி வைத்துச் சிறப்புரை ஆற்றினார். பயிற்சி முகாமில் செய்யுள் கற்பித்தல் குறித்து அனவரதநல்லூர், அரசு உயர்நிலைப்பள்ளி தமிழாசிரியர் துரைப்பாண்டியன், உரைநடை கற்பித்தல் குறித்து தருவைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் ஜடாஸ்ரீ, இலக்கணம் மற்றும் துணைப்பாடம் கற்பித்தல் குறித்து சி.பா. ஆதித்தனார் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் மு. பாலகிருஷ்ணன் ஆகியோர் பயிற்சியளித்தனர். இப்பயிற்சி முகாமில் தூத்துக்குடி மாவட்டத்தின் தனியார் பள்ளிகளிலிருந்து 170 தமிழ் போதிக்கும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முன்னதாக பள்ளி முதல்வர் பால்கனி அனைவரையும் வரவேற்றார். இப்பயிற்சி முகாமினை காஞ்சி ஸ்ரீ சங்கரா அகடாமி பதின்ம மேல்நிலைப்பள்ளி முதல்வர் இரா. செல்வவைஷ்ணவி, ஸ்ரீ காமாட்சி வித்யாலயா பதின்ம மேல்நிலைப்பள்ளி முதல்வர் கு. மீனாகுமாரி, மற்றும் பி.எம்.சி.பதின்ம மேல்நிலைப்பள்ளி முதல்வர் கோ. பால்கனி ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர்.

Similar News