கோவில்பட்டி பள்ளியில் உலக காகித பை தினம்!

கோவில்பட்டி இல்லத்தார் நடுநிலைப்பள்ளியில், உலக காகித பை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.;

Update: 2025-07-13 01:46 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இல்லத்தார் நடுநிலைப்பள்ளியில், உலக காகித பை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உலக காகித பை தின கொண்டாட்டத்தை முன்னிட்டு கோவில்பட்டி புதுக்கிராமம் இல்லத்தார் நடுநிலைப்பள்ளியில்,பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் காகித பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிக்கு இல்லத்துப்பிள்ளைமார் சமூக சங்கத்தலைவர் சோ.சங்கரன் தலைமை ஏற்று உரையாற்றினார். மாணவ, மாணவியர் தம் கைவண்ணத்தால் அழகிய காகிதப்பைகள் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொறுப்பு தலைமை ஆசிரியை, மற்றும் அனைத்து ஆசிரியப் பெருமக்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

Similar News