கல்லூரியில் மாணவியர் பேரவை புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவியர் பேரவை புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா;

Update: 2025-07-13 12:48 GMT
தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவியர் பேரவை புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவிகளின் சங்கப் பேரவைக்கு புதிய நிர்வாகிகள் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட நிலையில் நிர்வாகிகள் பதிவியேற்பு விழா கல்லூரி வளாகத்தில் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி ரூபா தலைமையில் நடந்தது. விழாவிற்க்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் மாணவி தொழில் முனைவோர் அனந்தலட்சுமி கலந்து கொண்டு பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய நிர்வாகிகள் பதவியேற்பை தொடர்ந்து அனைத்துத் துறைகள் சங்கங்கள் மற்றும் மன்றங்கள் இவற்றின் பிரதிநிதிகள் தங்களது திட்ட அறிக்கையை சமர்ப்பித்தனர். விழா ஏற்பாட்டினை ஆடைவடிவமைப்ப துறையை உளவியல்துறை சேர்ந்த பேராசிரியர்கள் செய்தனர்.

Similar News