இலங்கை தமிழர் கைது: முதல்வர் ஸ்டாலினுக்கு நெடுமாறன் கோரிக்கை

திருச்சி முகாமில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தும் இலங்கை தமிழர் நவநாதனின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.;

Update: 2025-07-13 15:26 GMT
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்துக்கு அகதியாக வந்த இலங்கை தமிழர் நவநாதனை, எந்த காரணமும் கூறாமல் போலீஸார் கைது செய்து திருச்சி சிறப்பு முகாமில் அடைத்துள்ளனர். இதற்கு எதிராக, திருச்சி சிறப்பு முகாமில் அவர் கடந்த 8 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால், அவரது உடல்நிலை சீர்கேடு அடைந்துள்ளது. இந்த பிரச்சினையில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு, நவநாதனை உடனடியாக விடுவித்து, மருத்துவமனையில் அனுமதிக்க முன்வருமாறு வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Similar News