சோளிங்கர் அருகே ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை
ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை;
சோளிங்கர் அருகே கேசவணங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட கேசவணங்குப்பம், சின்ன கேசவணங்குப்பம், எஸ்.எம்.கண்டிகை, மேட்டுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 'ஓரணியில் தமிழ் நாடு' தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்று வருகிறது. முகாமில் தகவல் தொழில்நுட்பபிரிவு தமிழரசன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் தாண்டவன், வட்ட செயலாளர் சத்தியமூர்த்தி, கிளை செயலாளர் செல்வம் மற்றும் தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.