நிழற்குடை இன்றி வெயிலில் வாடும் மக்கள்

மக்கள்;

Update: 2025-07-14 04:54 GMT
கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்., நகர் பஸ் ஸ்டாப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் உள்ள எம்.ஆர்.எஸ்., நகர் பஸ் ஸ்டாப் பகுதியில் வணிக நிறுவனங்கள் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது.இங்குள்ள வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பஸ் ஸ்டாப்பில் நீண்ட நேரம் காத்திருந்து பஸ் ஏறிச் செல்கின்றனர். இங்கிருந்த பயணிகள் நிழற்குடை இருக்கை சேதமடைந்தது. அதன்பின்பு, மழையின்போது சுவரும் இடிந்து வாய்க்காலில் விழுந்து விட்டது. அதன் பின்பு புதிதாக நிழற்குடை அமைக்கவில்லை. இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் முதியவர்கள், நிழற்குடையில் இருக்கை இல்லாததால், தரையில் வெகுநேரம் அமர்ந்திருந்து, பஸ் ஏறிச் செல்லும் நிலை உள்ளது. எனவே, எம்.ஆர்.என்., நகர் பஸ் ஸ்டாப்பில் புதிய நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Similar News