உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களை பயன்படுத்தி கொண்டு பயன்பெறுமாறு ஆட்சித்தலைவர் அறிவிப்பு

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களை பயன்படுத்தி கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ. சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தகவல்.;

Update: 2025-07-14 12:55 GMT
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்உங்களுடன் ஸ்டாலின் திட்டம்” குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ. சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் உரையாடினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து, தீர்வு காணும் வகையில் அனைத்து கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற சிறப்புத் திட்டத்தை நாளை 15.07.2025 அன்று தொடங்கி வைக்க உள்ளார்கள். தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ், மொத்தம் 10,000 முகாம்கள் நடைபெற உள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இத்திட்டமானது நாளை 15-ம் தேதி கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. அதனைத்தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் துவக்கி வைக்கப்பட உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில், இம்முகாம்கள்; 15.07.2025 முதல் 07.11.2025 வரை நடைபெறவுள்ளது. தொடக்க நாளான 15.07.2025 அன்று ஊரகப்பகுதிகளில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஆமணக்கு நத்தம், திருச்சூழி ஊராட்சி ஒன்றியம் ஆலடிப்பட்டி, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் கீழ கெப்பு லிங்கம்பட்டி, நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் மறையூர் ஆகிய 4 இடங்களிலும், நகரப்பகுதிகளான சிவகாசி மாநகராட்சி வார்டு 1 விஜய சுந்தர மஹால், திருவில்லிபுத்தூர் நகராட்சி வார்டு 1 பெருமாள்பட்டி நாடார் திருமண மண்டபம் ஆகிய 2 இடங்களிலும் என மொத்தம் 6 இடங்களில் முகாம்கள் துவங்கி வைக்கப்பட்டு தொடர்ந்து முகாம்கள் நடைபெறவுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 349 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்கள் கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப் பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப்படுகிறது. இம்முகாமிற்கு முன்னோடியாக முகாம் நடைபெறும் பகுதிகளில் தன்னார்வலர்கள் மூலம் துண்டுப்பிரசுரம் மற்றும் விண்ணப்பங்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு, பொதுமக்களிடம் கலந்துரையாடி, அவர்களுக்கு தேவையான மற்றும் தேவைப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து முகாமில் கலந்து கொண்டு பயனடைய உரிய விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது. இதுவரையில் 36,663 துண்டுப்பிரசுரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இம்முகாம்களின் சிறப்பு நிகழ்வாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர்கள் இம்முகாமிற்கு சென்று விண்ணப்பங்கள் அளித்தால் அவர்களுடைய தகுதியின் அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இம்முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45-நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும். எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் உங்கள் வீட்டின் அருகிலுள்ள முகாம்களுக்கு சென்று மனுவை அளித்து தங்களின் குறைகளுக்கு தீர்வு காண இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்தார்.

Similar News