கிருஷ்ணகிரியில் பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
கிருஷ்ணகிரியில் பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.;
கிருஷ்ணகிரியில், பா.ம.க. கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மேகநாதன் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். வருகிற 25-ந் தேதி ராம தாசின் பிறந்த நாளை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாட வேண்டும். கொடிகள் ஏற்றி, இனிப்புகள், பாட புத்தகங்கள் வழங்கி, கோவில்களில் சிறப்பு பூஜை செய்து, பிறந்த நாளை கொண்டாட இருப்பதாக முன்னாள் எம்எல்.ஏ. மேகநாதன் தெரிவித்தார். பலர் கலந்து கொண்டனர்.