லஞ்சம் வாங்கிய ஒசூா் மாநகராட்சி பில் கலெக்டர் கைது.
லஞ்சம் வாங்கிய ஒசூா் மாநகராட்சி பில் கலெக்டர் கைது.;
கிருஷ்ணகிரி மாவட்டம்ஒசூரை அடுத்த சின்ன எலசகிரி, ஆா்ஆா் நகரில் புதிதாக வீடுகட்டி வசித்துவரும் முனுசாமி (36) என்பவா் அப்பகுதி குடியிருப்போா் நலச் சங்கத்தின் தலைவராக உள்ளாா். இவரிடம் மாது என்பவா் தனது மனைவி துளசிமணியின் பெயரில் உள்ள வீட்டுக்கு, வீட்டுவரி ரசீது வாங்கி தருவதற்காக முனுசாமியிடம் உதவி கேட்டுள்ளார். இதையடுத்து ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில் வரி வசூலராக (பில் கலெக்டா்) பணிபுரியும் ரஜினியைச் சந்தித்து ஆவணங்களை அளித்து வீட்டு வரி விதித்து சான்று வழங்குமாறு கேட்டுள்ளாா். இதற்கு 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தரவேண்டும் என ரஜினி கூறியதால் இது குறித்து புகாரி பேரில் போலீசார். ரூ. 25 ஆயிரத்தை லஞ்சமாக ரஜினியிடம் முனுசாமி தந்தபோது அங்கு மறைந்திருந்த போலீசார் ரஜினியைக் கைது செய்தனா்.