தளி அருகே பெட்டதம்மா தேவி கோவில் கும்பாபிஷேகம்.
தளி அருகே பெட்டதம்மா தேவி கோவில் கும்பாபிஷேகம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள கலுகொண்டப்பள்ளி பகுதியில் உள்ள பெட்டதம்மா தேவி கோயிலில் பெட்டதம்மா, சந்திர சூடேஸ்வரர், சின்னம்மா ஆகிய சன்னதிகள் உள்ளன. இந்த கோயிலில் டி.வி.எஸ். தொழிற்சாலை, ஊர் பொதுமக்கள் சார்பில் புனரமைக்கபட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று அதிகாலை முதலே மந்திரங்கள் ஓத யாக பூஜை நடந்தது. தொடர்ந்து ஊர்வலமாக கலசங்களை எடுத்து வந்து பெட்டதம்மாவுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.