தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், பேராவூரணி துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் செல்லும் கிராமங்களான பேராவூரணி நகர் பகுதி, பழைய பேராவூரணி, செங்கமங்கலம், அம்மையாண்டி, ஆவணம், பைங்கால், சித்தாதிக்காடு, கொன்றைக்காடு, ஒட்டங்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டையங்காடு, மதன்பட்டவூர், திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி, சித்துக்காடு, வா.கொல்லைக்காடு, ஆனைக்காடு, களத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில், இன்று ஜூலை.15, செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்தடை ஏற்படும் என பேராவூரணி மின் உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். மின்தடை புகார்களுக்கு மின்னகம் எண் 9498794987 என்ற எண்ணில் புகார் மற்றும் விபரங்கள் அறிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.