இடைக்கழிநாடு பேரூராட்சி பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை தீவிரம் மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம் பங்கேற்பு
இடைக்கழிநாடு பேரூராட்சி பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை தீவிரம் மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம் பங்கேற்பு;
இடைக்கழிநாடு பேரூராட்சி பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை தீவிரம் மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம் பங்கேற்பு தமிழ்நாட்டு மக்களை ஒன்றிய அரசின் அநீதிகளுக்கு எதிராக ஒன்றிணைக்கும் திட்டத்தின் கீழ் நம் மண், மொழி, மானம்காக்க, ஓரணியில் தமிழ்நாடு எனும் முன்னெடுப்பை திமுக தொடங்கியுள்ளது. இந்த ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் இடைக்கழிநாடு பேரூராட்சி பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை நிகழ்ச்சி பேரூர் செயலாளர் மோகன்தாஸ் தலைமையிலும் மாவட்ட அவைத்தலைவர் இனியரசு, பேரூராட்சித் தலைவர் சம்யுக்தா அய்யனார் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ காஞ்சிபுரம் எம்பி ஜி செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு பனையூர் பெரியகுப்பம், நல்லூர் ஆகிய கிராமங்களில் வீடு வீடாக சென்று குடும்பத்தில் உள்ளவர்களை நேரில் சந்தித்து எந்தநெருக்கடியான சூழலிலும் தமிழ் நாட்டின் மண், மொழி மானம் காப்பாற்றப் பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? நிலையான ஆட் சியினை வழங்கிட அனு பவமிக்க மு.க.ஸ்டாலின் போன்ற ஒருதலைவரால் மட்டுமே முடியும் என்று நம்புகிறீர்களா, அப்படி யானால், நம் மாநிலத்தின் கோடிக்கணக்கான குடும் பங்களுடன். தாங்களும் தங்கள் குடும்பமும் ஓரணியில் தமிழ்நாடு' என கரம் கோர்க்க விரும்புகி நீர்களா? போன்ற 6 கேள்விகள் கேள்விகளைக் கேட்டார். அப்போது அந்த வீட்டில் இருந்த பெண் ஆம் என்று பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து மக்களுடன் முதல்வர் செயலி வழியாக திமுக கட்சி உறுப்பினர் சேர்க்கப்பட்டார். இதில் ஏராளமான கிராம மக்கள் தங்களது கைபேசி எண்ணை வழங்கி குறுஞ்செய்தியை பகிர்ந்து திமுகவில் உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சிற்றரசு, பேரூர் நிர்வாகிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.