தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கொள்ளுக்காடு ஊராட்சியில் பகுதி நேர அங்காடி திறப்பு விழா செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. கொள்ளுக்காடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வந்த நிலையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, ரிப்பன் வெட்டி புதிய பகுதி நேர அங்காடியை திறந்து வைத்து அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில், பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் தர்மராஜ், கூட்டுறவு சார்பதிவாளர் தாரணி, சேதுபாவாசத்திரம் திமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் மு.கி.முத்துமாணிக்கம், பொதுக்குழு உறுப்பினர் தனபால், கிராம தலைவர்கள் சுந்தர், செல்வராஜ், ஈசாக், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கவிதா சாமியப்பன், குழந்தைவேலு, கிளைச் செயலாளர்கள் பழனியப்பன், அந்தோணி பிச்சை, ராஜா, பிரதிநிதி பாலாஜி, விஜயகுமார், சாகுல் ஹமீது, ஹபீப் முஹம்மது, தாமரைக்கண்ணன் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர், கிராமத்தினர் கலந்து கொண்டனர்.