காதலித்த பெண் பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை 

தற்கொலை;

Update: 2025-07-15 14:42 GMT
பத்து ஆண்டுகளாக காதலித்த பெண் பிரிந்து சென்றதால், மனமடைந்த வாலிபர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் கீழவாசல் சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகன் சதீஷ்குமார் (25). இவர் கும்பகோணம் மேலக் காவேரி பகுதியில் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். அப்போது அப்பகுதியில் ஒரு இளம் பெண்ணுடன் சதீஷ்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது, இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சதீஷ்குமாருக்கும் அவர் காதலித்து வந்த பெண்ணிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர், இதனால் சதீஷ்குமார் மனமடைந்த நிலையிலேயே இருந்து வந்துள்ளார், இதனால சதீஷ்குமாரின் குடும்பத்தினர் கும்பகோணத்தில் வசித்து வந்த வீட்டை கடந்த ஓராண்டுக்கு முன்பு காலி செய்துவிட்டு, தற்போது தஞ்சாவூர் சுண்ணாம்புக்காரத் தெருவில் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக சதீஷ்குமார் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சதீஷ்குமார் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு திரும்பிய பொழுது சதீஷ்குமார் தூக்கு மாட்டிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கிழக்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சதீஷ்குமார் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சதீஷ்குமாரின் அண்ணன் பசுபதி அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

Similar News