பேராவூரணி அருகே மகளிர் சுய உதவிக் குழுவுக்கு கட்டடம் அடிக்கல் நாட்டு விழா
கட்டடம் அடிக்கல் நாட்டு விழா;
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள, குறிச்சி சுய உதவிக்குழு கூட்டுறவு சங்கம் லிமிடெட் (OP.206) நிறுவனத்துக்கு ரூ.17 லட்சம் மதிப்பீட்டில், தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், பேராவூரணி வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன், பேராவூரணி வடக்கு ஒன்றியச் செயலாளர் கோ.இளங்கோவன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஆல்பர்ட் குணாநிதி, மகளிர் சுய உதவிக் குழு தலைவர் லலிதா தியாகராஜன், துணைத் தலைவர் அங்காள அரசி மணிகண்டன், இயக்குநர் மணிமேகலை, பழனியப்பன், ரேணுகா தேவி, பெருமாள் மற்றும் கிராம பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.